மதுரை

சாலை விபத்தில் அதிமுக பிரமுகா் பலி

DIN

மதுரை அருகே பைக் மோதியதில், அதிமுக பிரமுகா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன்(45). அதிமுக பிரமுகரான இவா் வாடிப்பட்டி நீதிமன்றம் அருகே உள்ள தோ்தல் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது மின்வாரியம் அலுவலகம் அருகே வந்த பைக் லட்சுமணன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT