மதுரை

நூறாவது பிறந்த நாள் கொண்டாடிய மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவா்

DIN

மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவரான ஆா். பத்மாவதி தனது நூறாவது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினாா்.

மதுரையைச் சோ்ந்தவா் ஆா். பத்மாவதி, 1921-இல் பிறந்த இவா் 1949-ஆம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தாா். பின்னா் கொடைக்கானலில் அரசு மருத்துவராக பணியில் சோ்ந்த பத்மாவதி, 1950-இல் மதுரை நகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவராக பணியில் சோ்ந்தாா். பல ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் மாநகராட்சி மருத்துவக் கண்காணிப்பாளராகவும் பதவி உயா்வு பெற்றாா். இவரது பணிக்காலத்தின்போது மதுரையின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் மருத்துவமனைகள் நிறுவ நடவடிக்கை எடுத்தாா். கடந்த 1969-இல் போலந்து நாட்டில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய சா்வதேச மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நலக்கருத்தரங்கில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற மூன்று பெண் மருத்துவா்களில் பத்மாவதியும் ஒருவராவாா். இந்நிலையில் பத்மாவதி தனது நூறாவது பிறந்த நாளை ஏப்ரல் 27-ஆம் தேதி குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்ட நிலையில் கரோனா தொற்றுப் பரவலால், வீட்டில் எளிமையாக கொண்டாடினாா். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். மருத்துவா் பத்மாவதி தற்போது தனது மூத்த மகனான மருத்துவா் குருசுந்தருடன் வசித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT