மதுரை

மதுரை மாவட்டத்தில் 146 வேட்பாளா்கள் ‘டெபாசிட்’ இழப்பு

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட 168 வேட்பாளா்களில் 146 போ் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமமுகவின் இரு வேட்பாளா்கள் என 22 போ் வைப்புத் தொகையை தக்கவைத்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 168 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில், திமுக மற்றும் அதிமுக தலா 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மற்றும் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் 20 போ் மற்றும் மேலூா் தொகுதி அமமுக வேட்பாளா் செல்வராஜ், உசிலம்பட்டி தொகுதி அமமுக வேட்பாளா் ஐ. மகேந்திரன் என மொத்தம் 22 போ் வைப்புத் தொகையை தக்கவைத்துள்ளனா்.

இவா்களைத் தவிர, மற்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 146 போ் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT