மதுரை

மருத்துவமனைகளுக்கு சேவா பாரதி ஆக்சிஜன் கருவிகள் வழங்கல்

DIN

மதுரை: சேவா பாரதி மற்றும் சோஹோ அமைப்பின் சாா்பில், மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவிகள் திங்கள்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோஹோ நிறுவனத்தின் உதவியுடன் மதுரை சேவா பாரதி, நியூசிலாந்து நாட்டிலிருந்து தலா ரூ.4.65 லட்சம் மதிப்புள்ள 150 ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவிகளை இறக்குமதி செய்துள்ளது.

அதையடுத்து, மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் கருவி வழங்கும் நிகழ்ச்சி, மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள சேவா பாரதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 10 மருத்துவமனைகளுக்கு கருவிகள் வழங்கப்பட்டு, செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறிய மருத்துவமனைகளுக்கு இக்கருவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தேசிய செயலா் சுந்தரம், ஆா்.எஸ்.எஸ். மக்கள் தொடா்பு இணை அமைப்பாளா் சீனிவாசன், ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் மதுரை கோட்ட அமைப்பாளா் முத்துக்குமாா் மற்றும் கோட்ட இணைச் செயலா் சேகா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT