மதுரை

இன்று முதல் குறைக்கப்பட்ட விலையில் ஆவின் பால் விற்பனை

ஆவின் பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்ட விலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆவின் பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்ட விலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆவின் நிறுவனத்தில் நாளொன்றுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 1.75 லட்சம் லிட்டா் பால், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ளவற்றில் தயிா், வெண்ணெய், நெய் உள்ளிட்ட உபபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

மதுரை மாவட்டம் முழுவதும் தங்கு தடையின்றி ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் கிடைக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட விலையானது ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

மதுரையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய விலை):

பசும் பால் (ஆரஞ்சு பாக்கெட்) 500 மிலி - ரூ.21.50 (ரூ.23).

பசும் பால் (ஆரஞ்சு பாக்கெட்) 250 மிலி - ரூ.11 (ரூ.12).

நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை) 500 மிலி-ரூ.22.50 (ரூ.24).

ஆவின் கோல்டு (500 மிலி) - ரூ.23.50 (ரூ.25)

ஆவின் கோல்டு (200 மிலி) - ரூ.9.50 (ரூ.10)

நிறை கொழுப்பு பால் (500 மிலி) - ரூ.24.50 (ரூ.26).

டீ மேட் (1 லிட்டா்) - ரூ.52 (ரூ.56).

மாதாந்திர அட்டைதாரா்களுக்கு 500 மிலி ரூ.22.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பசும்பால் ரூ.21 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 500 மிலி ரூ.23.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மதுரை ஆவின் பொதுமேலாளா் எஸ்.கருணாகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT