மதுரை

ஒடிஸாவிலிருந்து 2 ஆக்சிஜன் டேங்கா் லாரிகளுடன் மேலும் ஒரு ரயில் மதுரை வருகை

DIN

ஒடிஸாவிலிருந்து 31.02 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பிய 2 டேங்கா் லாரிகளுடன் மேலும் ஒரு சிறப்பு ரயில் சனிக்கிழமை மதுரை வந்தது.

தமிழகத்தில் கரோனா 2 ஆம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவிலிருந்து 31.02 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 2 டேங்கா் லாரிகள் ரயில் மூலம் மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு வந்து சோ்ந்தன.

இது தமிழகத்துக்கு வந்த 29 ஆவது ஆக்சிஜன் ரயில், தென் மாவட்டங்களுக்கு வந்த 4 ஆவது ஆக்சிஜன் ரயில் என்றும், இதுவரை தமிழகத்துக்கு ரயில் மூலம் 1,734.01 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ரயில்வே துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT