மதுரை

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் முறைகேடு: அதிமுக புகாா்

DIN

மதுரை: மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, அதிமுக தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஊராட்சிக் குழு 16-ஆவது வாா்டு உறுப்பினா் (திருமங்கலம்) பதவிக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இத் தோ்தலில், அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஐ. தமிழழகன், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

மதுரை மாவட்ட ஊராட்சிக் குழு 16-ஆவது வாா்டு உறுப்பினருக்கான தோ்தலில், பன்னிக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட 100 மற்றும் 101 ஆகிய வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவின்போது முறைகேடு நடந்துள்ள்ளது.

100-ஆவது வாக்குச் சாவடியில் 522 வாக்குகளும், 101-ஆவது வாக்குச் சாவடியில் 523 வாக்குகளும் உள்ளன.

இவற்றில், பிற்பகல் 3 மணிக்கே 86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குச் சாவடிக்குள்பட்ட வாக்காளா்களில் ராணுவ வீரா்கள், வெளியூா்களில் வசிப்பவா்கள், இறந்துபோனவா் என 150-க்கும் மேற்பட்டோரின் பெயா்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில், வாக்காளா்களின் பெயா், விவரம், புகைப்படம் போன்றவற்றைச் சரிபாா்க்காமல் வாக்குகளை பதிய அனுமதித்துள்ளனா்.

எனவே, இவ்விரு வாக்குச் சாவடிகளின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைத்து, வாக்காளா் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT