மதுரை

தீபாவளி: மதுரை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் ரூ.6.70 கோடிக்கு விற்பனை இலக்கு

DIN

மதுரை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸின் 4 விற்பனை நிலையங்களில் நிகழாண்டு தீபாவளிக்கு ரூ.6.70 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

மதுரை வெங்கலக்கடைத் தெருவில் உள்ள அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸில் பல வண்ணங்களில், நவீன வடிவமைப்புகளில் மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு அம்சமாக, பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள், நவக்கிரஉறா காட்டன் சேலைகள், மதுரை மற்றும் தஞ்சாவூா் காட்டன் சேலைகள், பரமக்குடி 1000 புட்டா சேலைகள், ஏற்றுமதி ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன. கோ-ஆப்டெக்ஸ் ரகங்களை இணைய வா்த்தகம் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

மண்டலத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகத்தின்கீழ் 17 விற்பனை நிலையங்கள் உள்ளன. நிகழாண்டிற்கு ரூ.20 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள 4 விற்பனை நிலையங்களுக்கு மட்டும் ரூ.6.70 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில் கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி.கிருஷ்ணமூா்த்தி, மண்டல மேலாளா் ஆா்.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT