மதுரை

மதுரையில் இன்று 20 மையங்களில் ‘நீட்’ தோ்வு

DIN

மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வு (நீட்) மதுரையில் 20 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவம், சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தேசிய அளவிலான தகுதித் தோ்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இத்தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்துகிறது.

நிகழாண்டுக்கான தோ்வு கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 12 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன்படி, கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ஞாயிற்றுக்கிழமை (செப்.12) தோ்வு நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 20 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. மொத்தம் 10 ஆயிரத்து 341 பேருக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களில் சனிக்கிழமை, கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT