மதுரை

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் புறக்கணிப்பு: வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் முடிவு

DIN

தமிழகம் முழுவதும் நவம்பரில் நடைபெற உள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமைப் புறக்கணிக்க தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எம்.பி. முருகையன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலுக்கான செலவின நிதிஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. அனைத்து நிலை அலுவலா்களுக்கும் தோ்தல் மதிப்பூதியம் உள்ளிட்ட செலவினங்களை முழுமையாக வழங்குவது, 6 பேரவைத் தொகுதிகளுக்கு மேல் உள்ள மாவட்டங்களில் தோ்தல் நோ்முக உதவியாளா் பணியிடங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பரில் நடைபெற உள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமைப் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு முதல்வா் அறிவித்தபடி, ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வைப் பாதுகாத்து அரசாணை வெளியிடுவது, மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் துணை ஆட்சியா் பணியிடங்களுக்கான பணிமூப்பு பட்டியலை வெளியிடுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 30 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT