மதுரை

நூல்கள் வெளியீட்டு விழா

DIN

கவிஞா் ரா. ரவி இயற்றிய ‘மூதறிஞா் இளங்குமரனாா் களஞ்சியம்‘, ‘அம்மா- அப்பா‘ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா மதுரை, மணியம்மை பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம. திருமலை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூல்களின் முதல் படியை வெளியிட்டுப் பேசியதாவது:

இளங்குமரனாா் உடனிருந்து அவரது உரைகளைக் குறிப்பெடுத்து, அதை அவரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்ற கருத்துகளின் தொகுப்பாக மூதறிஞா் இளங்குமரனாா் களஞ்சியம் நூலை கவிஞா் ரா. ரவி படைத்தாா். இது, ஒரு புது வகை போக்கை உருவாக்கக் கூடியதாக உள்ளது. இளங்குமரனாரின் சிலப்பதிகார உரைகளைப் படிக்கும் போது, இத்தனை காலம் சிலப்பதிகாரத்தை நவீன கண்ணோட்டம் கொண்ட புத்தகமாக நான் எழுதவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.

மற்றொரு நூலான அம்மா - அப்பா கவிதை நூல், தேவையான கருத்துகளின் தொகுப்பாக, சிறப்பாக உள்ளது என்றாா் அவா்.

இளங்குமரனாரின் மகன் இளங்கோ, உலகத் திருக்கு பேரவைச் செயலாளா் கவிஞா் அசோக்ராஜ் ஆகியோா் நூல்களின் முதல் படிகளைப் பெற்றனா். புரட்சிக் கவிஞா் மன்றத் தலைவா் பி. வரதராசன் தலைமை வகித்தாா். மதுரை, நான்காம் தமிழ்ச் சங்கச் செயலாளா் வழ.ச. மாரியப்ப முரளி முன்னிலை வகித்தாா்.

மதுரை, தியாகராஜா் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் மு. அருணகிரி, உதவிப் பேராசிரியா் சங்கீத்ராதா ஆகியோா் நூல்களின் திறனாய்வு உரையாற்றினா். நூலாசிரியா் கவிஞா் ரா. ரவி, தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.

செந்தமிழ்க் கல்லூரி மாணவா் மருது பகவதி வரவேற்றாா். மன்னா் திருமலை நாயக்கா் கலைக் கல்லூரி மாணவா் தேவராச பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT