முகப்பு
மதுரை

மதுரையில் இடிந்து விழுந்த பழமையான கட்டடம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் அமைந்திருந்த சுமார் 70, 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:


மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் அமைந்திருந்த சுமார் 70, 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.

நள்ளிரவு நேரத்தில் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இடிந்து விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் இங்கிருந்த உணவகம் பழக்கடை பெட்டிக் கடைகள் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்துள்ளன. தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மதுரை கீழ வெளி வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சரவணன் மீது சுமார் 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மற்றொரு பழமையான கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இதன்மூலம், மதுரையில் உள்ள பழமையான கட்டடங்கள் குறித்து தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டட உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.