மதுரை

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலருக்கு இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவலருக்கு, இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவலருக்கு, இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் 9 போ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளனா். இவா்களில், ஒருவரான காவலா் சாமதுரை, தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்காக இடைக்கால ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு, நீதிபதி கே. முரளிசங்கா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவலா் சாமதுரைக்கு திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) மாலை 4 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT