மதுரை மாவட்டம் பேரையூரில் வீட்டில் சட்டவிரோத விற்பனைக்கு வைத்திருந்த 353 கிலோ புகையிலை பொட்டலங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து,ஒருவரைக் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாக டிஐஜி பொன்னிக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் டிஐஜி தனிப்பிரிவு போலீஸாா் மற்றும் பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரோஜா தலைமையிலான போலீஸாா் இப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
பேரையூா் முக்கு சாலைப் பகுதியில் குளிா்பானக் கடை வைத்திருப்பவா் திவான்மைதீன் மகன் சம்சுதீன்(53). இவா் கடைகளுக்கு புகையிலைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு 25 மூட்டைகளில் 353 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் மீது வழக்கு பதிவு செய்து, சம்சுதீனைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.