மதுரை

90's கிட்ஸ் பரிதாபம்: மதுரையில் சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் இளைஞர்!

மதுரையில் மணப்பெண் தேவை என சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் வாலிபரின் செயல் 90s கிட்ஸ் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மதுரை: மதுரையில் மணப்பெண் தேவை என சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் வாலிபரின் செயல் 90s கிட்ஸ் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல், சினிமா நடிகர்கள் குறித்தான சுவரொட்டிகள், பழிக்கு பழியாக வசனங்களில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சித்தரிக்கப்படும் விளம்பர சுவரொட்டிகள் எப்போதும் பேசுபொருளாகி வருவது வழக்கம்.

இந்நிலையில் 90-களில் பிறந்த மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் என்ற வாலிபர் ஒருவர் மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிப்பதுடன் சொந்தமாக நிலமும் கொண்டிருந்த நிலையிலும் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில், மதுரை மாநகர், புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என விளம்பர சுவரொட்டி அடித்து பெண் தேடும் படலத்தை துவக்கி உள்ளார்.

ஏற்கனவே 2K கிட்ஸ் திருமணம் முடித்து குழந்தைகளுடன் வலம் வருவதால், பல 90’s கிட்ஸ்க்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது நூதனமுறையில் மணமகள் தேவை என்று இந்த வாலிபர் செயல் 90’s கிட்ஸ் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT