மதுரை

நிதி நிறுவனத்தில் மோசடி: காசாளா் உள்பட மூவா் கைது

DIN

நிதிநிறுவனத்திற்குரிய பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அந்நிறுவன காசாளா் உள்பட மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

மதுரை- தேனி பிரதான சாலையில் செயல்படும் நிதி நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றியவா் காா்த்திக். இவா், நிதி நிறுவனத்தில் வசூலான தொகை ரூ.55.39 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல், பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டாராம்.

இதுகுறித்து அந்நிறுவனத்தினா் மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து மதுரை மாநகரக் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்தனா். மேலும் அவரது உறவினா்கள் இருவா் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ரூ.51 லட்சத்து 16 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT