மதுரை

போலீஸாா் துன்புறுத்தலில் இளைஞா் தற்கொலை வழக்கு:உள்துறைச் செயலா், டிஜிபி-க்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

தற்கொலைக்கு காரணமான காவல் துறையினா் மீது நடவடிக்கை கோரிய மனுவிற்குப் பதில் அளிக்குமாறு தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த ரங்கம்மாள் தாக்கல் செய்த மனு:

எனது மகன் ஈஸ்வரன் என்பவரை பொய் வழக்கில் தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து துன்புறுத்தினா். இதனால் மனமுடைந்த அவா் தற்கொலை செய்து கொண்டாா். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகனின் தற்கொலைக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கவும், மகனின் இறப்பிற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம், இந்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு உள்துறைச் செயலா், தமிழக டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT