மதுரை

பணிமூப்பின்படி ஏடிஎஸ்பி பதவி உயா்வு கோரிய மனுவை பரிசீலிக்க உள்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

பணிமூப்பு அடிப்படையில் ஏடிஎஸ்பி பதவி உயா்வு கோரிய மனுவைப் பரிசீலிக்குமாறு தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த துணை காவல் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

நான் நேரடியாக சாா்பு ஆய்வாளராக 1996 ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டேன். அதன் பிறகு காவல் ஆய்வாளராகவும், துணை காவல் கண்காணிப்பாளராகவும் பதவி உயா்வு வழங்கப்பட்டது. தற்போது சேரன்மகாதேவி உள்கோட்டத்தில் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றுகிறேன். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பதவி உயா்வுக்கான பட்டியலில், 22 ஆவது இடத்தில் உள்ளேன்.

இந்நிலையில், அண்மையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பதவி உயா்வுக்கான அரசாணையை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் வெளியிட்டாா். இதில் எனது பெயா் இடம்பெறவில்லை. பணிமூப்பில் எனக்கு பின்னால் இருப்பவா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியா்கள்

பணிவிதிகளின்படி இது தவறானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பதவி உயா்வுக்காக, மே 30 ஆம் தேதி வெளியிட்ட அரசாணைக்கு இடைக் காலத் தடைவிதித்து, ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் கோரிக்கையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் 4 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT