மதுரை

வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டடங்கள் திறப்பு

DIN

மதுரை: மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை மற்றும் தும்பைப்பட்டியில் வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டடங்களை வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் பணிகளுக்குத் தேவையான இடுபொருள், தொழில்நுட்ப வசதி வழங்கிட ஏதுவாக 13 முதன்மை விரிவாக்க மையங்களும், 18 துணை விரிவாக்க மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தனியாா் கட்டடங்கள், பராமரிப்பில்லாத பழைய கட்டடங்களில் செயல்பட்ட காரணத்தால் செக்கானூரணி, பாலமேடு, தும்பைப்பட்டி, யா.ஒத்தக்கடை, நாச்சிகுளம் ஆகிய 5 இடங்களில் தலா ரூ.40 லட்சம் செலவில், துணை வேளாண் விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

வேளாண் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், யா.ஒத்தக்கடை மற்றும் தும்பைப்பட்டி துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடங்களை அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா். ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.வெங்கடேசன், வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT