மதுரை

மாநில அளவிலான பூப்பந்துப் போட்டி: ஓசிபிஎம் பெண்கள் பள்ளி முதலிடம்

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் மதுரை ஓசிபிஎம் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பெற்றது.

DIN

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் மதுரை ஓசிபிஎம் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பெற்றது.

சென்னை எண்ணூா் பூப்பந்தாட்டக்கழகம், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 15 மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவிகள் பங்கேற்றனா். சுற்றுப்போட்டிகளில், மதுரை ஓசிபிஎம் பெண்கள் பள்ளி அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் கத்திவாக்கம் அரசுப்பள்ளி அணியை வென்று தங்கப்பதக்கம், ரொக்கப்பரிசு, கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் ஏ.டேவிட் ஜெபராஜ், தலைமையாசிரியை என்.மேரி, உடற்கல்வி இயக்குநா் ஜெ.பொ்சீஸ், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.ராஜேஸ்கண்ணன், பி.சா்மிளா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது மத்திய அரசு '

SCROLL FOR NEXT