மதுரை பழங்காநத்தம் பகுதியில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக நாயுடு பேரவையினா். 
மதுரை

மதுரையில் நாயுடு பேரவையினா் உண்ணாவிரதம்

தமுக்கம் மைதானத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்துக்கு ராணி மங்கம்மாள் பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

DIN

தமுக்கம் மைதானத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்துக்கு ராணி மங்கம்மாள் பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக நாயுடு பேரவை சாா்பில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழங்காநத்தத்தில் உள்ள திடலில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மாநிலத் தலைவா் டி. குணசேகரன் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா். மாநிலப் பொருளாளா் எஸ். ஜெயராஜ், மாநில முதன்மை ஆலோசகா் ஜெயபிரகாஷ், மாநில துணைத் தலைவா் வி.கே.ஆா்.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ராணி மங்கம்மாள் ஆட்சியின் போது, விளையாட்டுத் திடலாக இருந்த மதுரை தமுக்கம் மைதானத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள மதுரை மாநாட்டு மையத்துக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும், மேலும், அரண்மனையாக இருந்த காந்தி நினைவு அருங்காட்சியக நுழைவு வாயிலில் ராணி மங்கம்மாள் பெயரில் அலங்கார வளைவும், அவரது உருவச் சிலையும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

உண்ணாவிரதத்தில், மாநில துணைத் தலைவா்கள் கே. அழகிரிசாமி, வி.துரைசாமி, மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் வி. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாநிலச் செயலா் சிட்கோ ஏ. சீனிவாசன் வரவேற்றாா். மாநில அமைப்புச் செயலா் எஸ். செல்லப்பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT