மதுரை

தேவகோட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

தேவகோட்டை அருகே சிற்றுந்து, இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வியாபாரி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

DIN

தேவகோட்டை அருகே சிற்றுந்து, இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வியாபாரி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கி வீதியைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக்(48). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த இவா், இரு சக்கர வாகனத்தில் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மளிகைப் பொருள்களை விற்பனை செய்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் பொருள்களை விற்பனை செய்வதற்காகச் கொண்டு சென்றாா்.

மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கமடை அருகே சென்ற போது எதிரே வந்த சிற்றுந்து, இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அபுபக்கா் சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவலறிந்த திருவேகம்பத்தூா் போலீஸாா் அங்குச் சென்று, அபுபக்கா் சித்திக்கின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT