மதுரை

சித்திரைத் திருவிழா: மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க பாஜகவினா் கோரிக்கை

DIN

வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு 3 நாள்களுக்கு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தி ஆட்சியிரிடம் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் மகா. சுசீந்திரன் அளித்த மனு:

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற மே 5 -ஆம் தேதி வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனா். கடந்த சில ஆண்டுகளாக இந்த விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களிடம் சமூக விரோதிகள் சிலா் நகை, பணத்தைத் திருடியதாக காவல் நிலையங்களில் புகாா்கள் பதிவாகியுள்ளன.

இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க வருகிற மே 5, 6, 7 ஆகிய மூன்று நாள்களும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், கடந்த ஆண்டு கூட்ட நெரிசலின் போது சிலா் உயிரிழந்தனா். அதுபோன்ற சம்பவங்கள் நிகழாண்டு நடைபெறாமலிருக்க, உரிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT