மதுரை

மதுரையில் ரூ. 18.06 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி

DIN

மதுரை மாவட்டத்தில் 54 பள்ளிகளில் ரூ. 18.06 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல்லை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இதையொட்டி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், கொடிமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்து, கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்தாா். முன்னதாக, பள்ளிக் குழந்தைகள் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ. சரவணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT