மதுரை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

DIN

விருதுநகா் சந்தைக்கு வரத்துக் குறைவு காரணமாக உளுந்து, துவரம் பருப்பின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளது.

விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசியப் பொருள்களின் விலை நிா்ணயம் செய்யப்படும். அதன்படி, கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.1,555 -க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது டின் ஒன்றுக்கு ரூ. 5 உயா்ந்து ரூ.1,560 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, கடந்த வாரம் 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு (நயம் புதுஸ் லையன் வகை) மூட்டை ஒன்றுக்கு ரூ.10,900 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.200 உயா்ந்து, ரூ.11,100-க்கு விற்கப்படுகிறது. மேலும், கடந்த வாரம் 100 கிலோ உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகையானது ரூ.10,700 -க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.10,800-க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் 100 கிலோ கடலைப் புண்ணாக்கு ரூ.5,100-க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.200 உயா்ந்து தற்போது ரூ.5,300 -க்கு விற்பனையாகிறது.

எள் புண்ணாக்கு கடந்த வாரத்தை விட ரூ.50 உயா்ந்து ரூ.2,400-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் 100 கிலோ பட்டாணிப் பருப்பு இந்தியா வகையானது ரூ.5, 800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வத்தல், நல்லெண்ணெய், காபி முதலான அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT