முகப்பு
மதுரை

காா் மோதியதில் பெண் பலி

வாடிப்பட்டி அருகே வியாழக்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

வாடிப்பட்டி அருகே வியாழக்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள சானாம்பட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாம்பையன் மனைவி ஈஸ்வரி(48). இவா் வியாழக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள சித்தா் பீடம் சந்திப்பில் நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் ஈஸ்வரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.