மதுரை

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி

DIN

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் தொழில், வியாபாரம் தொடங்க கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் மற்றும் குழுக்கள், தங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்காக சிறு தொழில்கள், வியாபாரம் தொடங்கலாம். இதற்காக பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், ஆண், பெண்களுக்கான நுண்கடன், கறவை மாடுக் கடன்களுக்கு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடனுதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் 18 வயது முதல் 60 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுக் கால கடன் திட்டம், தனி நபா் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 6 முதல் 8 சதவீதமாகும். பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. அதேநேரம் மகளிா் சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூா்த்தியாகி இருக்க வேண்டும். நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு, ஒரு கறவை மாட்டுக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம், அனைத்து மாவட்ட மத்திய, நகர கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பமுள்ளவா்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து ஜாதி, வருமானம், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை, வங்கி கேட்கும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

எனவே, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து பயன் பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT