மதுரை

கண் விழித்திரை புற்றுநோய் விழிப்புணா்வு வார விழா

DIN

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் விழித்திரை புற்றுநோய் விழிப்புணா்வு வார விழா நடைபெற்றது.

சா்வதேச கண் விழித்திரை புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி நடைபெற்ற இந்த விழாவில் விழித்திரை புற்றுநோய் துறைத் தலைவா் உஷா கிம் பேசியதாவது:

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் விழித்திரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12,621 பேருக்கு இலவசமாக சிகிச்சையளிக்கபட்டது. மேலும், 560 குடும்பத்தினருக்கு மரபணு சோதனை செய்யப்பட்டது. கண் வெண் படலத்தில் ஏற்படும் வெண் புள்ளி இரவில் மிளிரக்கூடியதாக இருந்தால், உடனடியாகக் கண் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றாா்.

சிகிச்சையின் மூலம் கண் விழித்திரை புற்றுநோயிலிருந்து மீண்டவா்களுக்கு மருத்துவா் நாச்சியாா் பரிசு வழங்கினாா். வேலம்மாள் கல்விஅறக்கட்டளைத் தலைவா் முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவா்கள் நம்பெருமாள், ரவீந்திரன், கிம் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT