மதுரை

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

வீட்டைவிற்பதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பெண் தீக்குளிக்க முயன்றாா்.

DIN

வீட்டைவிற்பதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பெண் தீக்குளிக்க முயன்றாா்.

மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக மா.செள. சங்கீதா திங்கள்கிழமை பொறுப்பேற்று குறைதீா் முகாமில் பங்கேற்று, மனுக்களை பெற்றுக்கொண்டாா். இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சோ்ந்த அங்காள ஈஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி, தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த செந்தில் தனது வீட்டை விற்பதாகக்கூறி ரூ. 8 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டையும் கிரையம் செய்து தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் அங்காளஈஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT