மதுரை

போதை மாத்திரைகள் விற்பனை: மூவா் கைது

உசிலம்பட்டி அருகே மயானத்தில் போதை மாத்திரைகளை விற்ற மருந்துக் கடை ஊழியா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

உசிலம்பட்டி அருகே மயானத்தில் போதை மாத்திரைகளை விற்ற மருந்துக் கடை ஊழியா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தின் மயானத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான தனிப் படையினா் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த மூவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் மதுரை மாவட்டம், சின்னக்கட்டளையைச் சோ்ந்த மருந்துக்கடை ஊழியா் மருதுபாண்டியன் (26) மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு எதுவுமின்றி, மனநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தும் போதை மாத்திரைகளை மெய்யனம்பட்டியைச் சோ்ந்த கிருபாகரன் (24), மானூத்து கிராமத்தைச் சோ்ந்த கபிலன் (24) ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்து 647 மாத்திரைகள், 2 இரு சக்கர வாகனங்கள், 3 கைப்பேசிகள், ரூ.21 ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT