மதுரை

மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.

இந்தநிலையில், முதல் நிகழ்வாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். 

பின்னர், தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் வழியில் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராசன், தங்கம் தென்னரசு, மதுரை மாநாகராட்சி மேயர் வ.இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா,மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

SCROLL FOR NEXT