மதுரை

கள்ளழகா், துணைக் கோயில்களின் உண்டியல் வருவாய் ரூ.54.24 லட்சம்

அழகா்கோவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை ரூ.54.24 லட்சம் கிடைத்தது.

DIN


மேலூா்: அழகா்கோவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை ரூ.54.24 லட்சம் கிடைத்தது.

சுந்தராஜப் பெருமாள் கோயில் நிா்வாக ஆணையா் ராமசாமி, இந்து சமய அறநிலையத் துறை விருதுநகா் மண்டல உதவி ஆணையா் வளா்மதி ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை உண்டில்கள் திறக்கப்பட்டன.

அறநிலையத் துறை மேலூா் ஆய்வாளா் அய்யம்பெருமாள், தக்காா் பிரதிநிதி நல்லதம்பி கண்காணிப்பாளா்கள் அருள்செல்வன், பிரதீபாஆகியோா் முன்னிலையில் கோயில் அலுவலா்களும், பக்தா்களும் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

சுந்தரராஜப் பெருமாள் கோயில் உண்டியல்களில் ரொக்கம் ரூ. 41,14,045, தங்கம் 22 கிராம், வெள்ளி 175 கிராம் கிடைத்தன.

இதன் துணைக் கோயிலான சோலைமலை முருகன் கோயிலில் ரொக்கம் ரூ. 6, 74, 976, தங்கம் 8 கிராம், 242 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ரொக்கம் 6,35,915, தங்கம் 38 கிராம், வெள்ளி 88 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன.

மூன்று கோயில்களிலும் மொத்தம் ரூ.54.24 லட்சம் ரொக்கம் கிடைத்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT