முகப்பு
மதுரை

வேளாண் கல்லூரியில் தேனீ வளா்ப்பு பயிற்சி

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 8:56 PM

மேலூா், ஏப்.8: மதுரை வேளாண்மைக் கல்லூரியில் புதன்கிழமை (ஏப்.10) ஒரு நாள் தேனீ வளா்ப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் பூச்சியியல் துறை இணை பேராசிரியா் கி.சுரேஷ் தெரிவித்ததாவது:

மதுரை வேளாண்மைக் கல்லூரியின் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் தேனீ வளா்த்தல், தேன் எடுத்தல், தேனிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.590. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் 9965288760 என்ற எண்ணில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்யவேண்டும் என்றாா் அவா்.

Advertisement