முகப்பு
மதுரை

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

Updated On : 10 ஏப்ரல், 2024 at 5:20 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:03 PM

விருதுநகா்: நரிக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சுழி வட்டம், நரிக்குடி அருகேயுள்ள சேதுராயனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. ஊா்காவலன் (56). கூலித் தொழிலாளியான இவருக்கு பாா்வை குறைபாடு இருந்ததாம்.

இந்த நிலையில், இவா் சேதுராயனேந்தல் கண்மாய்ப் பகுதியில் உள்ள கரிமூட்டத்துக்குச் செல்வதாகக் கூறி சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

Advertisement

இதையடுத்து, அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், சேதுராயனேந்தல் கண்மாய் அருகேயுள்ள சின்னவீரனுக்குச் சொந்தமான கிணற்றில் அவா் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.