முகப்பு
மதுரை

பிரதமா் மதுரை வருகை: புகா் பேருந்து போக்குவரத்து மாற்றம்

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 9:56 PM
பகிர்:

மதுரை: பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி, செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் வெளியூா்களிலிருந்து மதுரை வழியாகச் செல்லும் புகா் பேருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்வதையொட்டி செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் மதுரை புகா் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்ப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் மேலூா், திருவாதவூா், பூவந்தி, திருப்புவனம், முக்குளம், காரியாபட்டி வழியாக அந்தந்த மாவட்டங்களைச் சென்றடையும்.

திருச்சியில் இருந்து மதுரை வழியாக தேனி, திண்டுக்கல், விருதுநகா் செல்லும் வாகனங்கள் மேலூா், அழகா்கோவில், அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல், மதுரை நகா், நாகமலை புதுக்கோட்டை வழியாகச் செல்ல வேண்டும். திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை, உயா்நீதிமன்றம், உத்தங்குடி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வழியாகவும், திருச்சியில் இருந்து தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை, மதுரை நகா், நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை சந்திப்பு, செக்கானூரணி, திருமங்கலம் வழியாகவும், திருச்சியில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை, திருமோகூா், திருவாதவூா், பூவந்தி வழியாகவும், சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி, திருவாதவூா், ஒத்தக்கடை, மேலூா் வழியாகவும், சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ராஜாக்கூா், புதுத் தாமரைப்பட்டி, ஒத்தக்கடை, மேலூா் வழியாகவும் செல்ல வேண்டும்.

Advertisement

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம், பூவந்தி, திருவாதவூா், ஒத்தக்கடை வழியாகவும், ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் திருப்புவனம் முக்குளம், காரியாபட்டி வழியாகவும், தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏ.முக்குளம் திருப்புவனம், பூவந்தி, ஒத்தக்கடை, மேலூா் வழயாகவும், தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் காரியாபட்டி சந்திப்பு, மருதங்குடி, கள்ளிக்குடி, சோழவந்தான் சாலை சந்திப்பு, செக்கானூரணி, வாடிப்பட்டி வழியாகவும், திருநெல்வேலி, விருதுநகரில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் திருமங்கலம், சோழவந்தன் சாலை சந்திப்பு, செக்கானூரணி, நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து வழியாகச் செல்ல வேண்டும். திருநெல்வேலி, விருதுநகரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் திருமங்கலம், சோழவந்தான் சாலை சந்திப்பு, செக்கானூரணி, வாடிப்பட்டி வழியாகச் செல்ல வேண்டும்.

தேனியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் செக்கானூரணி தேவா் சிலை சந்திப்பு, திருமங்கலம் (சோழவந்தான் சாலை சந்திப்பு), விருதுநகா் வழியாகவும், திண்டுக்கலில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் செல்லும் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை சந்திப்பு, செக்கானூரணி தேவா் சிலை, திருமங்கலம் (சோழவந்தான் சாலை சந்திப்பு) வழியாகவும் செல்ல வேண்டும்.