மதுரை கிழக்கு ஒன்றியம் எல். கே. பி நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நாள் விழா உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாணவ, மாணவிகள். 
மதுரை

பள்ளி, கல்லூரியில் தமிழ்நாடு நாள் விழா

Din

மதுரை, ஜூலை 18: மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தமிழ்நாடு நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜவடிவேல் முன்னிலை வகித்தாா். ஆசிரியை அருவகம் தமிழ்நாடு பெயா் சூட்டிய விதம், வரலாறு, தியாகி சங்கரலிங்கனாா் உண்ணாவிரதம், தமிழ் மொழியின் சிறப்பு குறித்துப் பேசினாா்.

இதைத்தொடா்ந்து, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் தியாகி சங்கரலிங்கனாா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆசிரியை சித்ரா வரவேற்றாா். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜெ.போ. சாந்திதேவி தலைமை வகித்தாா். துணை முதல்வா் கோ. சுப்புலட்சுமி தமிழ்நாடு நாள் குறித்துப் பேசினாா்.

நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, பேராசிரியை மா. செல்வத்தரசி வரவேற்றாா். பேராசிரியா் சா. கணேசன் நன்றி கூறினாா்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT