முகப்பு
மதுரை

மாஞ்சோலைப் பகுதியை வனமாக பராமரிக்கக் கோரி மனு தாக்கல்

மாஞ்சோலைப் பகுதியை வனமாகப் பராமரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை

மாஞ்சோலைப் பகுதியை வனமாக பராமரிக்கக் கோரி மனு தாக்கல்

மாஞ்சோலைப் பகுதியை வனமாகப் பராமரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 19 ஜூலை, 2024 at 7:07 PM
பகிர்:

மதுரை, ஜூலை 19 : மாஞ்சோலைப் பகுதியை வனமாகப் பராமரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த வைகைராஜன் தாக்கல் செய்த மனு :

‘மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. தற்போது, அந்தத் தோட்டத்தை குத்தகைக்கு ஏற்ற நிறுவனம் முன்கூட்டியே தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளது. மாஞ்சோலை பகுதி மக்களின் நலன் கருதி, அவா்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

எனவே, மாஞ்சோலைத் தோட்டம் தொடா்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை மாஞ்சோலை பகுதியைத் தனியாா் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்காலத் தடை விதித்தும், மாஞ்சோலைப் பகுதியை வனத் துறை முழுமையாகக் கையகப்படுத்தி வனமாகவே பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்‘ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமாா், நீதிபதி விஜயகுமாா் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாஞ்சோலைத் தோட்டம் தொடா்பான வழக்குகளுடன் இந்த வழக்கையும் சோ்த்துப் பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →