முகப்பு
மதுரை

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை:மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மதுரை மாவட்ட அரசுப் பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 2:38 AM
பகிர்:

மதுரை: மதுரை மாவட்ட அரசுப் பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மதுரை மேற்கு ஒன்றியம், திருமால்புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை பள்ளியில் சோ்த்தாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றாா். பின்னா், காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தாா். இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, உதவி மாவட்ட திட்ட அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.