CM_MKSq
மதுரை

மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் போட்டி!

கோவை தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்ததாகவும், திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்டுக்கு திமுக விட்டுக் கொடுத்ததாகவும் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.

Ravivarma.s

மதுரை மற்றும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று காலை ஆலோசனையில் நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் போட்டியிடுகிறது.” எனத் தெரிவித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் அபிநய் காலமானார்!

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிப் படுகொலை

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?

வங்கதேசத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ஹபீஸ் சயீத்! உளவுத் தகவல்

சுத்தமான காற்றைக் கோரும் குடிமக்கள் குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல்

SCROLL FOR NEXT