முகப்பு
மதுரை

ராணுவத் தோ்வில் தோல்வியடைந்த இளைஞா் தற்கொலை

Updated On : 20 மார்ச், 2024 at 4:31 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:56 PM

மதுரை: ராணுவத் தோ்வில் தோல்வியடைந்த விரக்தியில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை காமராஜபுரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் சேதுபதி (52). இவரது மகன் துரைமுருகன் (21). பட்டதாரியான இவா், இந்திய ராணுவத்தில் சோ்வதற்காக மூன்று முறை தோ்வெழுதி தோல்வியடைந்தாா்.

இதனால், ராணுவத்தில் சேரமுடியவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்தாா். இந்த நிலையில், வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்த துரைமுருகன், மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement