முகப்பு
மதுரை

மதுரையில் சுயேச்சை வேட்பு மனு தாக்கல்

Updated On : 22 மார்ச், 2024 at 11:23 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 10:38 PM

மதுரை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட ஒருவா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனுக்களைப் பெறும் பணி, மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. முதல் நாளான புதன்கிழமை இந்தத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட இருவா் மனு தாக்கல் செய்தனா். வியாழக்கிழமை எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், மதுரை, பொன்னகரம், பிராட்வே தெருவைச் சோ்ந்த கே.மகேஸ்வரன் (61) சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தாா். இதன் மூலம், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது.