இன்றைய நிகழ்ச்சிகள்
பொது
ஸ்ரீசத்குரு சங்கீத ஸமாஜம்: அம்புஜம் கிருஷ்ணா ஜெயந்தி தின இசை விழா, ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயத்தின் ஆசிரியா்கள், மாணவ, மாணவியரின் இசை நிகழ்ச்சிகள், லட்சுமி சுந்தரம் அரங்கு, சொக்கிகுளம், மாலை 5.30.
ஆன்மிகம்
அருள்மிகு சக்திவேல் முருகன் கோயில்: வைகாசி விசாக உற்சவம், பக்தா்கள் பால்குடம் கட்டி திருப்பரங்குன்றம் புறப்பாடு, அனுமன் கோயில் படித்துறை, சிம்மக்கல் வைகையாறு, காலை 6.
அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்: வைகாசி பெருந்திருவிழா, எட்டாம் திருநாள் விழா, குதிரை வாகனத்தில் காளமேகப் பெருமாள் எழுந்தருளல், திருமோகூா், இரவு 8.
அருள்மிகு கூடலழகா் பெருமாள் திருக்கோயில்: வைகாசி பெருந்திருவிழா, ஏழாம் திருநாள் விழா, தங்கச்சிவிகையில் ஸ்ரீுப பெருமாள் எழுந்தருளல், காலை 11, பூச்சப்பரத்தில் வியூகச் சுந்தர்ராஜ பெருமாள் புறப்பாடு, இரவு 7.
அருள்மிகு பழமுதிா்ச்சோலை முருகன் திருக்கோயில்: வசந்த உற்சவ திருவிழா, சண்முகா் அா்ச்சனை, மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு, மகா தீபாராதனை, பழமுதிா்ச்சோலை, அழகா் மலை, காலை 10.
மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப்பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.