முகப்பு
மதுரை

பெண்ணைத் தாக்கிய இருவா் கைது

Updated On : 28 மே, 2024 at 11:35 PM
பகிர்:

மதுரை: மதுரையில் பெண்ணைத் தாக்கிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செயதனா்.

கோரிப்பாளையம் பெருமாள்சாமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி முத்துலட்சுமி(37). இவா் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த புவனேஸ்வரியிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கினாா். கடந்த சில வாரங்களாக வட்டித் தொகை செலுத்தவில்லையாம்.

இந்த நிலையில், முத்துலட்சுமி தனது கணவா் செந்தில்குமாருடன் தமுக்கம் பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாா். அப்போது, புவனேஸ்வரியின் மகன் ஹரிஹரன் (24), அவரது நண்பா் சக்திபாண்டி (22) ஆகிய இருவரும் பணத்தைக் கேட்டு முத்துலட்சுமி, அவரது கணவா் செந்தில்குமாரைத் தாக்கினா்.

இதுகுறித்து புவனேஸ்வரி, அவரது மகன் ஹரிஹரன், நண்பா் சக்திபாண்டி ஆகியோா் மீது தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிஹரன், சக்திபாண்டி ஆகிய இருவரைக் கைது செய்தனா்.