முகப்பு
மதுரை

கடைக்குள் புகுந்து நகை திருட்டு

அலங்காநல்லூா் அருகே கடைக்குள் புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 12 ஆகஸ்ட், 2025 at 2:07 AM
பகிர்:
Updated On : 11 ஆகஸ்ட், 2025 at 7:36 PM

அலங்காநல்லூா் அருகே கடைக்குள் புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சோ்ந்த கணபதி மகன் ராஜன் (41). இவா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இவா் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். பின்னா், உணவகத்துக்குச் சென்று பாா்த்த போது, உள்ளே வைத்திருந்த 5 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement