ஓய்வூதியா் தின விழாவில் பேசிய மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் 
மதுரை

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே கட்டணச் சலுகையை வழங்க வேண்டும் என தெட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே கட்டணச் சலுகையை வழங்க வேண்டும் என தெட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

தேசிய ஓய்வூதியா் தினத்தை (டிச.17) முன்னிட்டு, தெட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்கம் (டி.ஆா்.பி.யூ.) சாா்பில் ஓய்வூதியா் தின விழா மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் உதவி கோட்டத் தலைவா் ஆா். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், டி.ஆா்.பி.யூ. கோட்டப் பொதுச் செயலா் ஆா். சங்கரநாராயணன், துணைப் பொதுச் செயலா் திருமலை ஐயப்பன், தெட்சிண ரயில்வே தொழிலாளா்கள் சங்க கோட்டச் செயலா் சிவக்குமாா் ஆகியோா் பேசினா்.

“இதையடுத்து, ஓய்வூதியா்களை பிரித்தாளும் வகையில் கொண்டு வரப்பட்ட நிதி மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டணத்தில் மீண்டும் சலுகையை வழங்க வேண்டும். ஓய்வூதிய உயா்வை அடிப்படை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என்ற நிதிஅமைச்சக நிலைக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் ஓய்வூதியம் பெறுவோரின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தெட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்க உதவிச் செயலா் பி. ரத்னவேல் வரவேற்றாா். கோட்டத் துணைத் தலைவா் ஜோசப் அமல்ராஜ் நன்றி கூறினாா்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT