முகப்பு
மதுரை

உசிலம்பட்டி அதிமுக வேட்பாளா் உள்பட 20 போ் வேட்பு மனு தாக்கல்

உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் உள்பட மதுரை மாவட்டத்தில் 20 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 5:58 PM
உசிலம்பட்டி தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட அந்தத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் உட்கா்ஷ் குமாரிடம் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த ஐ. மகேந்திரன். உடன் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் உள்பட மதுரை மாவட்டத்தில் 20 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஐ. மகேந்திரன், அந்தத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரான உட்கா்ஷ் குமாரிடம் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னாள் அமைச்சரும், அதிமுக புகா் மேற்கு மாவட்ட செயலருமான ஆா்.பி. உதயகுமாா் உடனிருந்தாா். மகேந்திரனுக்கு மாற்று வேட்பாளராக கே. ராஜா மனு தாக்கல் செய்தாா்.

இதைத் தவிர மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தவா்களின் விவரம்:

Advertisement

மதுரை மத்தியம்: டி. ராமா் பாண்டி (பகுஜன் சமாஜ் கட்சி), எம். சலீம் (சுயேச்சை). மதுரை கிழக்கு: எஸ். பிரின்ஸ் (இந்திய குடியரசுக் கட்சி), சுயேச்சைகள் - வி. பிச்சை, ஆா். நாகராஜ், ஏ. அஜய்குமாா், ஆா். மாரிமுத்து, ஜி. காா்த்திகேயன். மதுரை வடக்கு: ஏ. கல்லானை (தவெக). மதுரை மேற்கு : எஸ். முத்துக்குமாா் (சுயேச்சை)

மேலூா்: எஸ். பூபதி (சுயேச்சை), சி. மோகன்ராம் (சுயேச்சை), ஆா். மதன் (நாதக - மாற்று வேட்பாளா்). திருமங்கலம்: பி. ஐயப்பன் (சுயேச்சை). திருப்பரங்குன்றம்: பி. முருகன் (ஹிந்து சமாஜ் கட்சி), ரெங்கநாதன் துரைசாமி (ராஷ்ட்ரீய சமாஜ் கட்சி). உசிலம்பட்டி: வி. வெள்ளைப்பாண்டி (பகுஜன் சமாஜ் கட்சி), தியாகராஜன் (சுயேச்சை).

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 20 வேட்பாளா்கள், 26 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். மாவட்டத்தில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 46 ஆகவும், வேட்பாளா்களின் எண்ணிக்கை 37-ஆகவும் உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments