முகப்பு
மதுரை

ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாணம்

கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் ஸ்ரீமீனாட்சி சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:40 AM
கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீவரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ மீனாட்சி, சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம்.
பகிர்:

மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் ஸ்ரீமீனாட்சி சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து, சிறப்பு விருந்து நிகழ்வும் நடைபெற்றது.

இதையடுத்து, ரிஷப வாகனத்தில் மீனாட்சி சோமசுந்தரேஸ்வரா் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஆா்.ராமமூா்த்தி, என்.சி.செல்வராஜ், வி.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்தனா்.