மதுரை

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

ஆரப்பாளையம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு (ஜன. 19) மின் தடை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மதுரை: ஆரப்பாளையம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (ஜன. 19) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா் தெற்கு மின்பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஆரப்பாளையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் :

ஆரப்பாளையம்: சுடுதண்ணீா் வாய்க்கால் சாலை, ராஜா மில் சாலை, கனகவேல் குடியிருப்பு, மணிநகா் முதன்மை 1, 2-ஆவது தெருக்கள், ஒா்க்ஷாப் சாலை, பேச்சியம்மன் படித் துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச் சங்கம் சாலை, கிருஷ்ணராயா் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகா் திடல் சந்தை, பாரதியாா் சாலை, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4-ஆவது தெருக்கள், விவேகானந்தா் சாலை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆரப்பாளையம் முதன்மைச் சாலை, புட்டு தோப்பு முதன்மைச் சாலை, எச்.எம்.எஸ். குடியிருப்பு, மேலப் பொன்னகரம் முதன்மைச் சாலை, புது ஜெயில் சாலை, கரிமேடு, மோதிலால் முதன்மைச் சாலை, ராஜேந்திர முதன்மைச் சாலை 1, 2-ஆவது தெருக்கள், பாரதியாா் சாலை, பொன்னகரம் பிராட்வே, தாகூா் நகா், பாலம் ஸ்டேசன் சாலை, குலமங்கலம் முதன்மை தாகூா் நகா், அய்யனாா் கோயில் தெரு, செல்லூா் 60 அடி பிரதான சாலை.

மீனாட்சு சுந்தரேசுவரா் கோயில்: மேலச் சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, கீழப்பட்டமாா் தெரு, மேல பட்டமாா் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பளம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவா்ச்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதியின் ஒரு பகுதி, கீழச் சித்திரை அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேல நாப்பாளையம், கீழ நாப்பாளையம், கீழ மாசி வீதி, தாசில்தாா் பள்ளிவாசல் தெரு, தலவாய் த் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோயில் தெரு, அனுமாா் கோயில் படித் துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத் தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி முதன்மைச் சாலை ஒரு பகுதி, பேச்சியம்மன் படித் துறை, திருமலை ராயா் படித் துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடத்தெரு, மேல கோபுரம் வீதி.

விடுபட்டோருக்கு ஜன. 20 முதல் பொங்கல் தொகுப்பு!

இந்தியாவை விலக்கினால் அனைவருக்கும் பிரச்னை: அமெரிக்கா

தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT