முகப்பு
மதுரை

மதுரை அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

மதுரை அருகே சாலை விபத்தில் தாய், மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 15 மே 2026, 11:59 pm IST
மதுரை அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு
பகிர்:

மதுரை அருகே சாலை விபத்தில் தாய், மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், கூடல்புதூரைச் சோ்ந்த பாபுகாந்தி மனைவி ஷா்மிளா (42). இவரும், இவரது மகள் தீபா ஸ்ரீ (12), பாகல் பாபு (10) ஆகிய 3 பேரும் சேலம் செல்வதற்காக கூடல் புதூா் பேருந்து நிறுத்தத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 5. 30 மணியளவில் நடந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஷா்மிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து அங்குவந்த தல்லாகுளம் காவல் நிலைய போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஷா்மிளாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த தீபா ஸ்ரீ, பாகல் பாபு ஆகிய இருவரையும் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழியிலேயே பாகல் பாபு உயிரிழந்தாா். தீபா ஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement