முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம்
மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
டிவிஎஸ் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்டத் துணைத் தலைவா் சி.எம். செய்யதுபாபு தலைமை வகித்தாா். இதில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தக் கட்சியினா் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.
இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் அசாா் உசேன், முத்துப்பாண்டி, காமராஜ், சுந்தர்ராஜன், கோல்ட் ஹரி, நளினி, சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.